மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்! – வர்த்தக கூட்டமைப்பு

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடரும் அதேவேளை, உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி மற்றும் உற்பத்தியில் ஈடுபட தேவையான மூலப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தக கூட்டமைப்பின் (SLUNBA) தலைவி தன்யா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த உள்கட்டமைப்பை வழங்குமாறு SLUNBA அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் ஏற்றுமதி மற்றும் டொலர்களை நம்பியிருக்கக் கூடாது. அதற்கு பதிலாக, நாட்டில் ரூபாவை பாதுகாக்க உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்களை மேம்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையை அறியாமல் இருப்பது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய வரித் திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், வரி வசூலிக்க, உள்ளுர் கைத்தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் நிலையானதாக இருக்க வேண்டும், பணம் மக்களிடம் இருக்க வேண்டும் என்றார்.

இல்லையெனில், வரி வசூலிக்க முடியாது. பல அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான தீர்மானம்.

பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை விலக்கு இல்லாமல் பெறுகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு தனியார் துறை நிறுவனங்கள்.

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவு, கடன்களைத் தீர்க்க உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply