இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் ,சர்வ ஜன நீதி அமைப்பும் இணைந்து இன்றைய தினம் ஊர்திவழி கையெழுத்து போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர் .
அவ்வேளையில் எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது ;
இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை அரசாங்கம் நீக்குவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறது.ஆனால் இன்றுவரை அது நீக்கப்படவில்லை.இந்த வருட ஆரம்பத்திலே இந்த சட்டம் நீக்கப்படுகின்ற வரை இதனை உபயோகிக்க மாட்டோம் என்ற வாக்குறுதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் ,பல்வேறு சர்வதேச அமைப்புக்களுக்கும் ,இலங்கை பாராளுமன்றத்திலேயும் ஒரு உறுதிமொழி கூறப்பட்டிருக்கிறது.ஆனால் இது தற்போதும் உபயோகிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் 3 மாதங்களாக காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பிரயோகிக்கப்பட்டியிருந்தது .இதில் கைது செய்யப்பட்டவர்கள் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கபப்ட்டுள்ளார்கள்.
இந்த சட்டத்தினை மீளவும் உபயோகிப்பதற்கு இந்த அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்ற இந்த வேளையில் நாங்கள் இந்த போராடடத்தினை திரும்பவும் புத்துணர்ச்சி கொடுத்து ஆரம்பித்திருக்கின்றோம் .அதாவது இந்த வருடம் பெப்ரவரி ஆரம்பித்திருந்த இந்த கையெழுத்து போராட்டத்தினை மீளவும் ஆரம்பித்திருக்கின்றோம்.
இதில் அனைத்து தொழிற்சங்கங்களுடைய ஒன்றியங்களும் ,பொதுஜன அமைப்புக்களும் இணைந்து தற்போது செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த போராட்ட ஊர்தியினை 25 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்போகிறோம்.வடக்கு,கிழக்குக்கு அப்பால் செல்கின்ற பொழுது விசேடமாக மாணவர் ஒன்றியமும் ,தொழிற்சங்கங்களுடைய பிரதிநிதிகளும் எங்களுக்கு உதவியாக அந்தெந்த மாவட்டங்களிலே இதற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
யாழ்ப்பாணத்திலே இந்த ஊர்தியானது 3 நாட்கள் செல்லும்.இங்கே கூடுதல் அளவிலான கையெழுத்துக்கள் திரட்டப்பட வேண்டும் .அதற்கு பிறகு ஒவ்வொரு மாவட்டங்களாக செல்வோம்.இறுதியில் அம்பாந்தோட்டையில் இந்த போராட்டம் நிறைவு பெறும்.இதற்கு அனைவரும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.என்றார்.
பிற செய்திகள்



