சுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கு

<!–

சுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கு – Athavan News

சுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளிலிருந்து சுகாதார துறைக்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு உலக சுகாதார அமைப்புடன் இணைந்ததாக இந்த கணக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாடு இக்கட்டான நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் உதவியின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply