புதிய வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் சுகாதார அமைச்சு

கொழும்பு, செப் 10

நாட்டில் சுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்புடன் இணைந்ததாக இந்த கணக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனூடாக, சர்வதேச நாடுகளிலிருந்து சுகாதார துறைக்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டார்.

நாடு இக்கட்டான நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் உதவியின் அவசியம் குறித்தும் சுகாதார அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்

Leave a Reply