பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீது தாக்குதல்!

புத்தளம்  பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான பத்திரன இன்று இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் புத்தளம் கொட்டுக்கச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்கப்பட்ட பொலிஸ் பொருப்பதிகாரி படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply