நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி! – சஜித்

இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாணந்துரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சார்ந்தவர்களாவர்.

எனவே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றவர்களுடன் ஒன்றாக அமர்ந்து அமைச்சுப் பதவிகளை ஏற்க போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply