திருகோணமலையில் ‘பன்னாட்டுக் குற்றங்கள்’ நூல் வெளியீட்டு விழா!

கலாநிதி. ஶ்ரீ ஞானேஸ்வரனால் எழுதப்பட்ட பன்னாட்டுக் குற்றங்கள் (International crimes) எனும் நூலானது இன்று திருகோணமலையிலுள்ள ஜுபிலி மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

காலை 10 மணியளவில் சுடரேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிழ்வினை திருகோணமலை மாவட்ட ஆயர் வண.கலாநிதி. நோயல் இம்மானுவேல் தலைமை தாங்கினார்.

அவரது தலைமை உரையைத் தொடர்ந்து வருகையாளர்களுக்கு நூல்கள் கையளிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியற்துறைத் தலைவர் பேராசிரியர் நூலினை மதிப்பாய்வு செய்து உரையாற்றியதுடன் இந்நூலின் முக்கியத்துவம் பற்றியும் தன் உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெற்றது.

இந்நூலானது ஆங்கிலம், ஜேர்மன், டொச் மற்றும் சிங்களம் முதலான மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது பற்றியும் நூலாசிரியர் தன் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்வை ஊடகவியலாளர் ச. திருச்செந்தூரன் தொகுத்து வழங்கியதுடன், வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தமையும், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.சி. தண்டாயுதபாணி முதலான அரசியல் பிரமுகர்கள், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். சிறீதரன், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply