விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு 14ஆம் திகதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாடானது கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடம், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்றினை 2015ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றது.

‘உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக வளர்ந்து வரும் பொருத்தமான விவசாயத் தொழில்நுட்பங்கள்’ என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply