இலங்கையில் குறைந்துள்ள மின்சார பாவனை! வெளியான தகவல்

கடந்த இரண்டு மாதங்களில் மின்சார பாவனை குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் நாளாந்த மின்சார பாவனை 48 தொடக்கம் 49 மில்லியன் அலகுகளாக இருந்ததாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது அது 38 முதல் 39 மில்லியன் மின்சார அலகுகளாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்த மின்துண்டிப்பு காரணமாக தற்போது மின்சார பாவனை குறைவடைந்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வார இறுதி நாட்களில் குறைந்தளவான மின்சார பாவனையே இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply