இலங்கை கடற்பரப்பில் தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமண்ட் கப்பலினால் கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்ட பாதிப்புக்கு, குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து 22 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடாக கோரப்பட வேண்டும் என கடற் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த நட்டஈடு தொகையை பெற்றுக் கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதப்புர தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அதன் மதிப்பீட்டு அறிக்கை குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் கப்பலின் உரிமையாளர் நிறுவனம் என்பவற்றுக்கு சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நிறுவனங்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை.
இந்தநிலையில் இது தொடர்பில் சட்டநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அதனூடாக நட்டஈடு தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக கடற் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதப்புர தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்





