வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

கொழும்பு, செப் 12

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 03ஆவது அரைச்சதம் இதுவாகும். இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Leave a Reply