கடற்றொழில் அமைச்சின் உணவுப்பாதுகாப்பு முயற்சிகளுக்கு அமெரிக்க உதவிகள்

கொழும்பு, செப் 12: நன்னீர் மற்றும் கடல் நீரேரிகளில் கடற்றொழில் அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீன் வளர்ப்பு, கடற் பாசி வளர்ப்பு, இறால் வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு உதவுவதற்கான கலந்துரையாடல் அமெரிக்கா பிரதிநிதிகளுடன் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நிகழ்த்தினார்.

இக்கலந்துரையாடலில், அரசின் பிரதான திட்டங்களான உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு உத்வேகமளிக்கும் வகையில், உதவி வழங்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் கோரிக்கை வைத்ததாக கடற்தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply