மார்ட்டின் சோங்கோன்-ஜனாதிபதி இன்று சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தீவு வந்துள்ள நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சோங்கோன் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சொங்கோன் நேற்று (12) இலங்கைக்கு வந்திருந்தார்.

பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் சபாநாயகர் பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்ததாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply