மே09 வன்முறைச் சம்பவம்: மேலும் இருவர் கைது!

மே09 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் வீட்டை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோகந்தரவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டை தாக்கி, சொத்துக்களை அழித்தமை மற்றும் தீ வைத்து எரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (12) சந்தேகநபர்களை கைது செய்தனர்.

31 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் கஹாவத்தை மற்றும் கம்புருப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply