திருமலையில் நெல் அறுவடை,பசளை தட்டுப்பாடால் பாரிய நஷ்டம்!

திருகோணாமலை – தம்பலகமம் பட்டிமேடு, பிச்சவெளி விவசாய கண்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் , சிறு போக வேளாண்மை அறுவடை செய்து வருகின்றனர்.

பிச்சைவெளி விவசாய கண்டத்தில் சுமார் 425 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் வேளாண்மை பயிர் செய்கை இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த போகங்களில் ஒரு ஏக்கருக்கு 40-50 மூடைகள் விளைச்சல் கிடைத்தது என்றும்.இச்சிறு போகத்தில் ஒரு ஏக்கருக்கு 15 -18 மூடைகளே கிடைக்கின்றன எனவும் விவசாயிகள் கூறுகின்றன.

இச் சிறு போகத்தில் போதிய அளவு விளைச்சல் கிடைக்கவில்லை, காரணம் கிருமி நாசினி பசளை கிடைக்காமை, உரிய நேரத்துக்கு பசளை கிருமி நாசினிகள் விசிறப்படாமை என தெரிவிக்கின்றனர்.

டீசல் குறைவு அதனைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கஷ்டம். வேளாண்மை அறுவடைக் கூலியும் அதிகம் 20000/= ரூபா எடுக்கிறார்கள். இம்முறை பாரிய நஷ்டம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சிறு போகத்தில் வேளாண்மை செய்தவர்கள் பணம் உள்ளவர்கள் சிலர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து யூரியா பசளை விசிறினர். பணம் இல்லாதவர்கள் சும்மா இருந்தனர்.

அடுத்த போவதுத்திலாவது எமது வேளாண்மைச் செய்கைக்கு தேவையான பசளை,கிருமி நாசினிகளை உரிய நேரத்துக்கு தந்ததுமாறு வேண்டிக் கொள்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply