ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் ஒருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் இன்று (13.09.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (12) மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ கமெராவின் உதவியுடன் அந்த நபர் விபத்தில் சிக்குவது பதிவாகியிருந்தது.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கொட்டகலை ரொசிட்டா பகுதியில், சம்பவத்தின் தொடர்புடைய வான் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, இளைஞன் உயிரிழந்ததை அறிந்து , வானுக்கு அடியில் இருந்து அவரை இழுத்துச் சென்று , வீதி ஓரத்தில் போட்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸாருக்கு குறித்த சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளர்.
பிற செய்திகள்





