மஸ்கெலிய மக்களின் நலன் கருதி சமுர்த்தி வங்கி வேண்டும்-ராஜ் அசோக் வேண்டுகோள்!

மஸ்கெலியா சுற்றியுள்ள மக்களின் நலன் கருதி சமுர்த்தி வங்கி ஒன்று வேண்டும் என்று மஸ்கெலியா சபையில் பல முறை வலியுறுத்தி பிரேரணை நிறைவேற்றி மற்றும் பல முறை அழுத்தங்கள் கொடுத்து சமுர்த்தி பிரதான வங்கி வேண்டும் என்று கேட்டதிற்கு கிடைத்தது சமுர்த்தி உப வங்கி.

இதன் திறப்பு விழா மிகவும் சிறப்பாக ஜனவரி மாதம் இடம்பெற்றது. திறப்பு விழாவை தவிர ஆரம்பிக்கப்பட்டு இன்னும் ஒரு செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாதந்தோறும் மக்களின் பணத்தில் கட்டிட கூலி மட்டுமே  கொடுக்கபடுகின்றது. இந்த விடயம் மஸ்கெலியா மக்களை ஏமாற்றும் செயலாகும்.

கடந்த வாரம் முதியோர் சமுர்த்தி கொடுப்பனவு கூட சுமார் 10km சென்று நோர்வுட் பிரதான வங்கியில் பெற்றார்கள். இதில் அனைவரும் 70 வயதிக்கு மேற்பட்டவர்கள்.

65000 மக்கள் வாழும் மஸ்கெலியா தொகுதியில் இது சாத்தியமான விடயமா?
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி கேட்டபோதுஅவரின் பதில் மாதந்தோறும் கூலி கொடுப்பதற்கு இன்னும் சமுர்த்தி தலைமை காரியாலயம் கொழும்பிலிருந்து பதில் வரவில்லையாம்.

இது வேடிக்கையான விடயம் தயவு செய்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் அல்லாமல் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு உப வங்கி தேவையில்லை பிரதான சமுர்த்தி வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை அரசு மற்றும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நேற்று இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply