ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் சத்தியாககப் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அடக்குமுறையை நிறுத்து, போராட்டத்தை தொடாதே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய், போன்ற கோசங்களை ஏந்தியவாறு ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் பெருமளவானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் சட்டத்தரணி நுவான் போபகே, சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்





