அதிகார பகிர்வு இல்லையேல் முதலீடுகளும் இல்லை! – உலகத் தமிழர் பேரவை

அதிகாரப் பகிர்வு வழங்கப்படாமல் இலங்கையில் எந்தவிதமான முதலீடுகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

அதன் பேச்சாளர் சுரேந்திரன் இந்த விடயத்தைக் கூறினார். இலங்கை தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கிறது.

அதிலிருந்து மீள்வதற்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த அமைப்புகள் தயாராக உள்ளன. ஆனால் அதற்கு இலங்கையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சரியான அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு எட்டப்படாமல், வடக்கு கிழக்கில் மாத்திரம் அன்றி, இலங்கையில் எந்த பகுதியிலும் புலம்பெயர்ந்த அமைப்புகள் முதலீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கையில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கும், உலகத் தமிழர் பேரவை அழுத்தம் கொடுக்கும் எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply