தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு “ தற்கொலையை தடுப்போம் “ என்ற தொனிப்பொருளில் செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது.
இந் நிகழ்வானது திருகோணமலை உளநோய் விசேட வைத்தியர் டொக்டர் கயானி சிறிவர்தன தலைமையிலும் உளநல மருத்துவர்களின் பங்குபற்றுதலுடனும் நடைபெற்றது.
இந் நிகழ்வினை பிராந்திய சுகாதாதார பணிமனையின் உளவள வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் கௌரீஸ்வரன் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.
இதன்போது உளவள ஆலோசனை உத்தியோகத்தர்கள், பாடசாலை உளவள ஆலோசகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.


பிற செய்திகள்



