நீர்கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும், அரச அடக்குமுறை ஒழிய வேண்டும்,பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும், வாழ்க்கை செலவு குறைக்கப்பட வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 5 .30 மணி அளவில் நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் சிவில் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியவர்கள் சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர். அத்துடன் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தை நீர்கொழும்பு மக்கள் போராட்டக் குழு ஏற்பாடு செய்திருந்தது. சுமார் ஒரு மணித்தியாளம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பிற செய்திகள்

Leave a Reply