களனி துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர் தொடர்பில் வெளியா தகவல்!

களனி – பட்டிய சந்தி பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதாள உலகக்குழு உறுப்பினரான மட்டக்குளிய சூட்டி உக்குகேவின் மைத்துனரான ஆனமலு ரங்க என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களுள் ஒருவரான மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் ரிம்ஸான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply