விதைகள் முளைதிறண் அற்றதென விவசாயிகள் சுட்டிக்காட்டு-அவதானம் செலுத்துமாறு டக்ளஸ் பணிப்பு!

வீட்டுத் தோட்டத்திற்காக வழங்கப்படும் விதைகள் முளைதிறண் அற்றதென விவசாயிகள் சுட்டிக்காட்டிய நிலையில், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் குறித்த விடயம் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

வீட்டுத் தோட்டத்திற்காக வழங்கப்படும் விதைகள் முளைதிறண் அற்றவையாக காணப்படுகின்றதென விவசாயிகள் சுட்டிக்காட்டினர். சமுர்த்தி திணைக்களத்தினால் இவை வழங்கப்படுகிறது.

அவ்வாறு, வழங்கப்படும் விதைகள் உரிய முறையில் விதைக்கப்படுகிறதா என கண்காணிப்பதில்லை. பயனாளி தெரிவிலும் கவனம் செலுத்த வேண்டும். காணி, கிணறு இல்லாதவர்களிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வழங்கிய பின் அது தொடர்பில் மீளாய்வு செய்வதில்லை. சிலர் விற்கின்றனர். இன்னும் சிலர் அதை உணவாக்குகின்றனர். விதை தாணியங்களை பாதுகாக்க மருந்திடப்பட்டுள்ளது என்ற ஆலோசனை பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

அவர்கள் நஞ்சினை உணவாக்குகின்றனர் என விவசாயிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் விதைகள் உற்பத்தி திணைக்கள அதிகாரி குறிப்பிடுகையில்,

விதைகள் பொதியிடப்பட்டு 2 வாரங்களிற்குள் பயிரிடப்படாவிட்டால், முளைதிறண் குறைவானதாக இருக்கும் என தெரிவித்தார். பதிலளித்த அமைச்சர்,

நீங்கள் இருவாரத்திற்குள் விதைக்கப்பட வேண்டும் என்கின்றீர்கள். சமுர்த்தி திணைக்களம் இதுவரை வழங்கப்பட்ட புள்ளி விபரம் கிடைக்கவில்லை என்கிறது.

இவ்வாறு, இழுபறி நிலை காணப்பட்டால், கால தாமதம் ஆகும். இதனை சீர் செய்வது தொடர்பில் ஆராய வேண்டும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, தாம் மருத்துவ தாதியர் ஊடாக மேற்கொண்ட கள ஆய்வினடிப்படையில், கிளிநொச்சி நகர் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களில் வீட்டு தோட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி சிறியது என்பதால், நகர் பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. சாடிகளை பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply