8 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஆடைகளை அணியும் அரசியல்வாதிகள்

சில அமைச்சர்கள் நாடாளுமனறத்திற்கு அணிந்து வரும் கோட் ஆடையின் பெறுமதி 8 லட்சம் முதல் 9 லட்சம் ரூபா எனவும் அதிக விலையில் ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது என்பது தனக்கு தெரியாது எனவும் ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

என்னால், அப்படி செய்ய முடியாது. நான் 2 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான பருத்தி சாட்டையையே அணிந்துவருகிறேன். இதனால், எனக்கு சம்பளத்தை பெறாமல் கடமையாற்ற முடியாது. நான் வாங்கும் சம்பளத்தை விட வேலை செய்வேன் என்ற வாக்குறுதியை வழங்க முடியும்.

சம்பளத்தை தவிர எனக்கு வேறு வருமானங்கள் இல்லை. நான் எளிய முறையில் வாழ்ந்து வருபவன். நான் கோட் அணிய விரும்புவதில்லை. சிறந்த கோட் ஒன்றின் விலை சுமார் 2 லட்சம் ரூபா.

நாடாளுமன்றத்திற்கு சிலர் அணி வரும் கோட் 8 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை. எவ்வாறு அதனை செய்கின்றனர் என்று தெரியாது. நான் அணிந்திருக்கும் பருத்தி சட்டை 2 ஆயிரத்து 500 ரூபா.

கோட் உடையை வாங்கும் பணத்தில் இவ்வாறு பருத்தி சட்டைகளை கொள்வனவு செய்தால், இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தலாம். சிலருக்கு சம்பளத்தை பெறாமல் வேலை செய்ய முடியும்.

அரசாங்கம் வழங்கும் வாகனத்தை விட ஆடம்பர வாகனங்கள் வீடுகளில் இருக்கின்றன. அவர்களால், அதனை செய்ய முடியும். எனினும் என்னை போன்று சம்பளத்தை நம்பி வாழும் ராஜாங்க அமைச்சர்களுக்கு சம்பளம் அவசியம்.

நான் சம்பளம் வாங்குகிறேன், ஒரு சதம் கூட மோசடி செய்யாமல் வேலை செய்கிறேன் என்ற உறுதிமொழியை நான் வழங்குகிறேன். சம்பளம் இன்றி வேலை செய்கிறேன் என்று நான் உங்களுக்கு வாக்குறுதி வழங்க முடியாது. அப்படி நான் செய்தால், அது என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும் செயல் எனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply