மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் 1986 ஆம் ஆணடு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற போது எழுதிய கடிதம் அங்குள்ள சிட்னியில் உள்ள விக்டோரியா ராணி கட்டடத்தில் ஒரு பெட்டிக்குள் பேணப்பட்டு வருகின்றது.
இந்தக் கடிதத்தை ‘‘2085- ஆம் ஆண்டில் இந்தக் கடித உறையைப் பிரித்து சிட்னி நகர மக்களுக்கு நான் எழுதியதைக் கூற வேண்டும்” என எலிசபெத் வலியுறுத்தியிருக்கிறார்.
இங்கிலாந்தின் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் மறைந்தார்.
இந்த நிலையில் அவர் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அந்தவகையில் ராணி எலிசபெத் எழுதிய கடிதம் ஒன்று அவுஸ்ரேலியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி விக்டோரியா கட்டடத்தில் ரகசியமாகப் பூட்டிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடிதத்தை அடுத்த 63 ஆண்டுகளுக்கு யாரும் படிக்கக் கூடாது என்ற ராணியின் உத்தரவும் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி மேயருக்கு தன் கைப்பட அந்தக் கடிதத்தை ராணி எலிசபெத் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் உள்ள உறையின் மேற்பகுதியில், “2085-ஆம் ஆண்டில் இந்தக் கடித உறையைப் பிரித்து சிட்னி நகர மக்களுக்கு நான் எழுதியதைக் கூற வேண்டும்” என எலிசபெத் வலியுறுத்தியிருக்கிறார்.
சிட்னி மக்கள் 2085ஆம் ஆண்டு ராணி எலிசபெத் எழுதிய கடிதத்தைப் படிக்க ஆவலாக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.





