கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்த கல்முனை வலய பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் .சகுதுல் நஜீம் தலைமையில் இன்று (15.09.2022) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மருதூர் கனி மண்டபத்தில் நடைபெற்றது.
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்ட நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் ஏ.எஸ்.எம். சிம்ரன், உயிரியல் விஞ்ஞானம் ,பௌதீக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களான ஏ.அஸ்மி அஹமட் , எம்.ஆர்.எம். சிமர், விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி அலியார் நசீஹா உட்பட மாவட்டத்தில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற 10 மாணவர்கள் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கிய மாலை அணிவிக்கப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர்களின் பங்கு பற்றுதலோடு கெளரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதம கணக்காளர் ஏ.எம். றபீக், உள்ளக பிரதி கணக்காய்வாளர் வி.சேகர், கல்முனை வலய கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச்.எம்.பௌசர், எம்.எச்.எம்.ஜாபிர், திருமதி ஜிஹானா ஆலிப், உதவி கல்வி பணிப்பாளர் ஏ.பி.நஸ்மியா ஸனூஸ், கோட்டக்கல்வி பணிப்பாளர் வி.எம்.சம்சம் உட்பட பாடசாலை அதிபர்கள் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள், என பலர் இதில் கலந்து கொண்டனர்.


பிற செய்திகள்



