கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழப்பு

<!–

கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழப்பு – Athavan News

பேருவளை – மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 11.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு நபர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.


Leave a Reply