நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு!

<!–

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு! – Athavan News

இலங்கைக்கான நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் அண்மையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் விசேட கணக்காய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் பி.சி.விக்ரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பொது நிதி தொடர்பான குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த கணக்காய்வு இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இறுதி அறிக்கை விரைவில் கோப் குழுவுக்கு கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply