கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட மூதூர், கிண்ணியா, வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட எழுத்தாளர்களுக்கான ஒன்றுகூடல் செயலமர்வும், பிரதேச சாகித்திய விழாவும் இன்று (18) சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர சரண்யா சுதர்சன் , முதன்மை விருந்தினராக திரு. இரா.இரத்தினசிங்கம் ஓய்வுநிலை அதிபர் அவர்களும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அரூஸ், அனாமிகா பண்பாட்டு மைய பணிப்பாளர் பேராசிரியர் பாலசுகுமார் ,தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ரப் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.
இதில் மூதூர், கிண்ணியா, வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து தங்களின் பங்குபற்றுதலையும், கலந்துரையாடலையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்



