ஹெரோயி­னுக்கு அடி­மை­யான ஆண்­கள் மூவ­ரால்  15 வய­துச் சிறு­வன் துஷ்­பி­ர­யோ­கம்

ஹெரோயி­னுக்கு அடி­மை­யான ஆண்­கள் மூவ­ரால்  15 வய­துச் சிறு­வன் துஷ்­பி­ர­யோ­கம்

கோப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­யில், உயிர்க் கொல்லி போதைப் பொரு­ளான ஹெரோயி­னுக்கு அடி­மை­யான 25 க்கும் 27 வய­துக்­கும் இடைப்­பட்ட ஆண்­கள் மூவ­ரால், அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த 15 வய­துச் சிறு­வன் ஒரு­வன்பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளான்.

அந்­தப் பகு­தி­யி­லுள்ள முன்­பள்ளி ஒன்­றில் வைத்தே இந்­தச் சம்­ப­வம் கடந்த வாரம் நடை­பெற்­றுள்­ளது.

மாலை­வே­ளை­யில் சிறு­வனை வலுக்­கட்­டா­ய­மாக இழுத்­துச் சென்று மூவ­ரும் பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னின் தாயார் மேற்­கொண்ட முறைப்­பாட்­டுக்கு அமை­வாக சந்­தே­க­ந­பர்­கள் மூவ­ரும் கைது செய்­யப்­பட்டு மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.
இதே­வேளை, முறைப்­பாட்டை மீளப்­பெ­று­மாறு சிறு­வ­னின் தாயா­ருக்கு, அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த ஒரு­வர் அழுத்­தம்=மிரட்­டல்= விடுப்­ப­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

Leave a Reply