நாட்டு மக்கள் தற்போது சவர்க்கார கட்டியொன்றையேனும் கொள்வனவு செய்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அண்மையில் சிறிய பாதீடு ஒன்றை வௌியிட்டது. அதில் அவர்கள் திட்டமிட்ட சில விடயங்களை செய்தார்கள். 12 தொடக்கம் 15 சதவீதம் வரை வெட் வரியை அதிகரித்தார்கள்.
ஏற்கனவே, எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தமை காரணமாக அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரி அறவீடுகளும் அதிகரிக்கும் பட்சத்தில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.
சர்வதேச கடன்களை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த வரி அறவீடுகளை மேற்கொண்டு மக்கள் மீது சுமைகளை இறக்கி வைக்கின்றது.
பிற செய்திகள்



