மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தால் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு, தொழிலாளர் தேசிய சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் பழனி திகாம்பரம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், குறித்த நிறுவனம் அதனை இன்னும் வழங்காதுள்ளது.
எனவே, குறித்த வேதனத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு அமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்



