குறிஞ்சாக்கேணி பகுதியில் கடற்படையினரால் படகு சேவை முன்னெடுப்பு!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று முதல் படகு சேவையை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்தப் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, திருகோணமலை குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து அனர்த்தத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாலத்தின் உரிமையாளர் உட்பட 3 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த ஆட்டோ: ஒருவர் பலி: மூவர் காயம்!

Leave a Reply