மகளை கொடூரமாக தாக்கிய தந்தை!

காலி – கடுகொட பகுதியில் தமது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையின் இரண்டு ஆசிரியைகளுடன் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. வெயன்கொட பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர், ஆன்மீகத்தினால் நோயை குணப்படுத்துவதாக கூறி, கைத்தடியினால் தாக்கப்பட்டு உயிரிழந்த 9 வயதுடைய சிறுமி, இந்த 16 வயதுடைய சிறுமியின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்திற்கு உதவி வழங்கியதாக கூறி, சிறுமியின் தாயார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி, தந்தை மற்றும் அவரது பாட்டியுடன் வசித்து வந்துள்ள நிலையில், அவர் நீண்ட காலமாக தந்தையினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமி நீதிமன்ற உத்தரவின் படி, காலி – கித்துல்பிட்டி சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான தந்தை, காலி நீதிவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *