கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழில் ஆராய்வு!(படங்கள் இணைப்பு)

வடமாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பருத்தித் துறை  பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றது.

நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நேற்றையதினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

 கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகவும் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *