வடக்கில் கடற்றொழில் அமைப்புக்களைப் பிரித்தாளும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சம்மேளனப் பிரதிநிதிகள்,

நேற்றைய தினம் வடமராட்சி வடக்கின் சுப்பர் மடத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது .இந்தக் கூட்டத்திற்கு முல்லைத்தீவு ,பூநகரி ,கிளிநொச்சி,மன்னார் ,வடமராட்சி கிழக்கு ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள்.இதற்கு யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்தொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை.இணையத்தில் சம்மந்தப்பட்டவர்களே கலந்துகொண்டிருந்தார்கள்.

இதன் பின்புலம் என்னவென்றால் எங்களுடைய கடற்தொழில் அமைப்புக்களைப் பிரித்தாளுவதற்காகும் .கடற்தொழிலாளர்களின் பலத்தினை காட்ட வேண்டிய இந்த நேரத்தில் . இப்படியான கேவலமான விடயத்தினை மேற்கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக பணத்தினை வேண்டிக்கொண்டு அரசியல் பின்புலத்தில் இந்த கூட்டத்தினை நடத்தியிருக்கிறார்கள்..

தடை செய்யப்பட்ட தொழில்களைப் பற்றி கதைக்க வேண்டுமெனின் தடை செய்யப்பட்ட தொழில் எங்கு நடக்கின்றதோ அங்கு இவ்வாறான கூட்டங்களை நடத்த வேண்டும். எங்களுடைய கடற்தொழில் சமூகத்தினை பிரித்து ஆள்வதற்கு விட மாட்டோம்.

யாழ் .மாவட்டத்தில் இந்திய இழுவைப் படகுகள் ஒரு பிரச்சனையாக உள்ளது. அத்துடன் தடை செய்யப்பட்ட சுருக்கு வளை பயன்பாட்டினால் மிகவும் பாதிக்கப்படுகிறோம். அந்தெந்த இடத்தில் இருக்கின்ற சங்கங்கள் ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது.

முனைக்கு அப்பால் தடை செய்யப்பட்ட எந்தவொரு தொழில்களையும் நாங்கள் செய்வதில்லை.தருகின்ற 30 லீற்றர் மண்ணெண்ணய்க்கு ஓடாமல் இருக்கின்றோம்,ஓடினால் நட்டம்.

தடை செய்யப்பட்ட சுருக்கு வலை பயன்பாடு நடக்கின்ற இடங்களில் கூட்டங்களை ,போராட்டங்களை நடாத்துங்கள் .ஏன் இங்க வந்து கதைக்கிறீர்கள்.எங்களை குழப்பி விட்டு ஏன் திசை திருப்புகிறீர்கள் .இதற்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்களை பிரித்து ,கடற்தொழில் வளங்களை அளிக்கும் செயற்பாட்டினை யார் செய்தார்களோ .இதற்கு பின்ணியிலும் அவர்களே இருக்கிறார்கள்.இனி வரும் காலங்களில் அந்த அரசியல் கட்சி எது என்று நேரடியாக சொல்லுவோம்.

அத்துடன் தடை செய்யப்பட்ட உள்ளூர் இழுவைப்படகு இன்றுவரையும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இன்று அனைத்து உணவுகளிலும் இரசாயனம் கலந்திருக்கிறது .

ஆனால் மீனில் எந்தவொரு இரசாயனமும் கலக்கப்படவில்லை .கடல் உணவில் மாத்திரமே இரசாயனங்கள் கலக்கப்படாது.அதற்காகத் தான் மக்கள் அதனை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

எனவே கடற்றொழில் அமைச்சர் உடனடியாக சுருக்கு வலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .உள்ளூர் இழுவைப்படகுரிய சட்டங்கள் மீண்டும் கொண்டு வர வேண்டும்.அனுமதியில்லா அட்டைகளை வெளியேற்றுங்கள்.என கேட்டுக்கொள்கிறோம்.என்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *