விகாரைகள், மத ஸ்தலங்கள் இருள் சூழ இடமளிக்க முடியாது! – சபாநாயகர்

மின் கட்டண அதிகரிப்பில் விகாரைகள் மற்றும் மத தலங்களுக்கு நிவாரணம் வழங்க உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வேன். விகாரைகள், மத ஸ்தலங்கள் இருள் சூழ இடமளிக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தவலம ஸ்ரீ விஜயராம விகாரையின் விகாராதிபதி முதுனுவல அனுருந்த தேரர் குறிப்பிட்டாவது,

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்சாரம் மற்றும் நீர்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.பொருளாதார பாதிப்பினால் இக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் அரசியல்வாதிகளுக்கான வரபிரசாதங்களில் எவ்வித மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. விகாரைகளுக்கான மின்கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு மின்சாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்திய போது அவரது பதில் பொறுப்பற்ற விதமாக காணப்பட்டது.

பிரச்சினைகளை குறிப்பிட முறையான தரப்பினர் கிடையாது என சபாநாயகரை நோக்கி குறிப்பிட்டார். இதன்போது கருத்துரைத்த மல்வத்து பீட செயலாளர் திமுல்குபுரோ ஸ்ரீ தம்ம தேரர், நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். விகாரைகளுக்கு கிடைக்கப்பெறும் தானம், நிவாரணம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களை குறை கூற முடியாது.

விகாரைகள் மற்றும் மத தலங்களுக்கான மின்கட்டண அதிகரிப்பு நியாயமற்றதாகும். வழமைக்கு மாறாக மின்கட்டணத்தை விகாரைகளினால் செலுத்த முடியாது, ஏனெனில் நாங்கள் நாணயம் அச்சிடவில்லை. ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்க வேண்டும் என்றார்.

விகாரைகள் மற்றும் மத தலங்கள் முக்கியமாகும் இவற்றை இருளில் சூழ ஒருபோதும் இடமளிக்க முடியாது. விகாரைகள் மற்றும் தல தலங்களுக்கான மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்க பொறுப்பான தரப்பினருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *