வெற்றி யாருக்கு? முதல் ரி-20 போட்டியில் இந்தியா- அவுஸ்ரேலியா இன்று மோதல்!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா அணி, இன்று (செவ்வாய்கிழமை) முதல் ரி-20 போட்டியில் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டி, மொஹலியில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னோட்டமாக இத்தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் இதுவரை 23 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 13 போட்டிகளில் இந்தியா அணியும் 9 போட்டிகளில் அவுஸ்ரேலிய அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *