குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்கு மறுப்பு தெரிவித்த யாழ்.பல்கலை நிர்வாகம்!

யாழ். கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் சிலையை பல்கலைக்கழகத்திற்குள் அமைப்பதற்கு எவரும் அனுமதி கோரவில்லை எனவும், அவ்வாறான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று (19-09-2022) காலை முதல் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவின் உருவச்சிலை வைப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பில் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவுக்கு பல்கலைக்கழகத்தில் சிலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சிலை அமைக்க யாரும் அனுமதி கேட்கவில்லை. வளாகத்தில் சிலைகளை நிறுவுவது என்பது ஒரு நீண்ட செயல்.

அப்படி எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், ஊடகங்கள் மூலம் தான் இதுபற்றி அறிந்தேன் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *