-கபிலன் –…

-கபிலன் –

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘கிராமிய வீதிகளை காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி 72.7 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (25.11.2021) நடைபெற்றது.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை சுபத்திராம விகாராதிபதி ரன்முத்துகல தேரர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்திக்கான அடிக்கல்லை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி நீண்டகாலமாக குன்றும் – குழியுமாக காணப்பட்டது. குறித்து இந்த வீதியை அபிவிருத்தி செய்து தர வேண்டும் என்று மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடத்திலும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

Leave a Reply