
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதற்கான அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் பட்டினியால் வாடும் மக்கள் அடுத்து போராட முன்வருவார்கள் நாட்டில் இருண்ட நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
ஆட்சியாளர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் போதுமான டொலர்கள் இருப்பதாகத் தெரிவித்த விமல், மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் கைத்தொழில்துறையினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் பாடுபட வேண்டும் என்றும் வீரவன்ச கூறினார்.
பிறசெய்திகள்



