வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் 67 வயதுடைய நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 37600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply