ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டிய பாரிய நிலுவை தொகை! – வெளியான அறிக்கை

வீதிகள், பாலங்கள், அரச கட்டடங்கள் மற்றும் சிறிய தொட்டி அணைகள் உட்பட நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்ட ஒப்பந்ததாரர்களுக்கு 357 பில்லியன் ரூபா நிலுவை தொகை வழங்கவுள்ளதாக திறைசேரியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வருடம் ஒகஸ்ட் 31 ஆம் திகதி நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளாக இந்த தொகை குறிப்பிடப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒப்பந்ததாரர்களுக்கு இவ்வளவு பாரிய நிலுவை தொகையை ஒரே நேரத்தில் செலுத்த திறைசேரியால் முடியாது எனவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய பணம் தவணை முறையில் வழங்கப்படும் எனவும் பதில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply