வடமராட்சியில் உயிரிழந்த வயோதிபருக்குக் கொரோனா உறுதி!

உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட வயோதிபருக்குக் கொரோனா வைரஸ் தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறை, வடமராட்சியைச் சேர்ந்த 76 வயதுடைய செங்கல்வரதராசா சக்திவேல் என்பவர், நேற்று வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply