இலங்கையுடன் பேச்சை ஆரம்பித்தது இந்தியா!

இந்தியா, இலங்கையுடன் தனது கடனை மறுசீரமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16ஆம் திகதியன்று ஆரம்பித்ததாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் கடனுக்காக ஒரு ஆரம்ப ஒப்பந்தத்தை எட்டியது.

அத்துடன், உத்தியோகபூர்வ கடனாளர்களிடமிருந்து நிதி உறுதிமொழிகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது.

இதேவேளை இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயார் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply