
தற்போதைய உயர் மின் கட்டணத்தில் உள்ள சிக்கலை தீர்க்க சூரிய சக்திக்கு மாறுவது முன்மொழியப்பட்டுள்ளது.
சூரிய சக்தியை இலங்கை ஒரு விருப்பமாக பார்க்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதிக மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விலை உயர்வுக்கு அனுமதி வழங்கியது.
எவ்வாறாயினும், இந்த விலையேற்றமானது இலங்கை மின்சார சபையினால் கோரப்பட்டதை விட குறைவாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்



