மருந்து பற்றாக்குறை: வைத்தியசாலைகளில் புதிய இருப்புக்கள் பெறப்படுகின்றன

கொழும்பு,செப் 21

வைத்தியசாலைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துத் தட்டுப்பாடு இருந்த போதிலும் வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

பல தட்டுப்பாடுகள் காணப்பட்டாலும் வழமை போன்று சத்திரசிகிச்சைகள் இடம்பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும், பற்றாக்குறையாக இருந்த மருந்துகளும் பெறப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply