மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு !

மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.

எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சில குழுக்கள் அவரது மரணத்தை சாதகமாக பயன்படுத்தி ஆதாயத்தை தேடுவதாகவும் கூறியுள்ளார்.

முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்ததற்காக 22 வயதான மஹ்சா அமினி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இருந்தபோது, ​​அவருக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் பல நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்திருந்தார்.

Leave a Reply