
பல யுத்தங்களுக்குப் பிறகு நாடுகள் கண்ட பல இன்னல்களுக்கு பிறகான சமூக, பொருளாதார கட்டமைப்பிலே ஏற்பட்ட மாற்றங்கள் சமாதானத்தையும், அமைதியையும் உலகத்தின்பால் வலியுறுத்துவதற்கு தூண்டியது என மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சார்பில் மாலினி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் அமைதி பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தோம்.
அமைதி என்பது வெறுமனே ஒட்டுமொத்த சமூகத்தினால் மாற்றத்தினை கொண்டுவர முடியும், தனி ஒரு மனிதரால் மாற்றத்தினை கொண்டுவர முடியாது.
உண்மையில் அமைதியும், சமாதானமும் எங்கு வலிறுத்த வேண்டுமென்றால் ஒரு பரஸ்பரம், நல்லிணக்கம், புரிந்துணர்வு போன்ற விடயங்கள் பறைசாற்றுகின்ற இடத்திலாகும்.
2009 ஆம் ஆண்டு ஆண்டிற்கு பின்னர் யுத்தம் இல்லை, ஆனால் அமைதி இருக்கின்றதா? என்று பார்த்தால் நிச்சயமாக அமைதி இல்லை.
அமைதி எங்கு இருக்கிறது? ஏன் அமைதி நாட்டில் ஏற்படுத்தப்படவில்லை போன்ற கேள்விகள் உள்ளன. அகிம்சை என்பதனை ஏற்படுத்துவதற்கு பெரியதொரு கருவியாக நாங்கள் கைக்கொள்ள முடியும்.
இவ்வாறான பரஸ்பரம், புரிந்துணர்வு சரியான உரிமைகள் பகிரப்படுகின்ற பொழுது நிச்சயமாக ஒரு அமைதியான மனித மேம்பாட்டினை கட்டியெழுப்ப முடியும்.
ஐக்கிய நாடுகள் சமவாயத்தில் குறிக்கப்பட்டுள்ள விடயங்கள் போல அமைதியினை நிலைநிறுத்துவதற்காக அந்தெந்த நாடுகளுக்கு ஒவ்வொரு இனங்களுக்குமிடையில் உரிமைகள் பகிரப்பட வேண்டும்.
எனவே ஒவ்வொருவரும் தனிப்பட புரிந்துகொண்ட அமைதி, சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு திடமாக உழைக்க வேண்டும். – என்றார்.
பிறசெய்திகள்



