இலங்கை எப்போது சமாதான கிண்ணத்தினை சுவீகரிக்கின்றதோ அன்று தான் உலகத்திலே சமாதானம் நிலைக்கும்- விமலேஸ்வரி கருத்து!

இன்றைய தினம் சமாதான பேரணியை இங்கு ஒழுங்குபடுத்தியிருந்தோம்.இன்று உலக அமைதி தினம். அமைதி,சமாதானம்,சகவாழ்வு என்பவற்றிற்கு உலக மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.இன்று இன ,மத வன்முறைகள் உலகெங்கிலுமே வெடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையிலே அமைதியைத் தேடி எவ்வாறு நாங்கள் செல்ல வேண்டும் மிக முக்கியமான விடயமாகும் ,இந்த சமாதானம் முக்கியமாக பாடசாலை மட்டத்திலே கொண்டு வரப்பட வேண்டும் என மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தகுமார் தெரிவித்தார்.

யாழில் இன்றையதினம் இடம்பெற்ற சர்வதேச சமாதான தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற மகளிர் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிராம மட்டங்களிலும் புரிந்துணர்வு அடிப்படையில் சமாதானத்தினைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த சமாதானம் சகவாழ்வு ஆகியவற்றுக்காக நாங்கள் அமைதியான முறையிலே நாட்டினை கொண்டு சென்றால் தான் நல்ல நாடாக இருக்க முடியும்.பல நாடுகளுக்கு சென்று ஆசிய கிண்ணம் போன்ற பல கிண்ணங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.ஆனால் இதுவரை நாங்கள் சமாதான கிண்ணத்தினை நாட்டிற்கு கொண்டு வரவில்லை.

ஏனெனில் உலகத்திலே மிகவும் அமைதி இல்லாத நாடாக இலங்கை பெயர் போயிருக்கின்றது.இந்த நிலையில் இந்த கிணத்தினை யார் கொண்டு வர போகிறார்கள்? எப்போது கொண்டுவர போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாத வினாவாகத் தான் இருக்கின்றது .

கடும் போக்காளர்கள்,முரண்பட்ட கருத்துக்கள் ,பல்வேறுபட்ட கொள்கைகள் ஆகியற்றினாலேயே சமாதானம் அற்றுப்போய் இருக்கின்றது.

இந்த நாட்டிலே எல்லோரும் வாழக்கூடிய நாடு என்று எப்போது இந்த சமாதான கிண்ணத்தினை இலங்கை சுவீகரிக்கின்றதோ அன்று தான் உலகத்திலே சமாதானம் நிலைக்கும் என்று கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply